பொருளாதாரம் பாதிப்பு! காங்கிரஸ் கணிப்பு உண்மையாகிவிட்டது!!

0
0

சென்னை: பணம்வாபஸ் திட்டம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் எச்சரித்தது உண்மையாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை விபரம்:


நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5-ஆக சரியும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக அமைப்பு சாரா தொழில்கள் நலிவடைந்துவிட்டன. இதனால், பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டுள்ளது.


உற்பத்தி குறைந்து வருவதன் காரணமாக ஏற்றுமதித் தொழில் சரிவைச் சந்தித்து வருகிறது. வேளாண் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களுக்கும், புதிய முதலீடுகளுக்கும் மத்திய அரசு வாய்ப்பு வழங்கவில்லை.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது மத்திய பாஜக அரசின் மிகப் பெரிய தோல்வி ஆகும்.
வங்கிகளில் கடன் வளர்ச்சி விகிதமும் முடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவடையும் என்று நாங்கள் முன்கூட்டியே கணித்து எச்சரித்தது தற்போது நடந்துவிட்டது. மத்திய அரசே நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுவிட்டது. கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. அதற்கு அடுத்த நிதியாண்டில் 7.1 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here