இருக்கும்வரை சம்பாதிச்சுடுவோம் ..புது கொள்கையில் அமைச்சர்கள்..!

0
0

கத்தி முனையில் தொங்குவது போல தமிழக ஆட்சி நிலவரம் இருக்கிறது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

அமைச்சர்களும் தங்களது பதவி எப்போது பறிபோகும் என்ற நிலையில் பரிதவிப்பான சூழலில் காலம் தள்ளி வருகின்றனர். அதனால்,
அவர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஆட்சி போனால், மீண்டும் பதவியோ அல்லது ஆட்சியோ வரப்போவதில்லை. அதனால்,  நாட்களை எண்ணிக்கொண்டே நம் காரியத்தையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டனர்.

அதற்கு ஒவ்வொரு துறை அமைச்சர்களும் பரஸ்பர உதவிகள் செய்து கொள்கின்றனர். தூக்கம் தொலைத்த தமிழக அமைச்சர்கள், வெகு சீக்கிரத்திலேயே எழுந்துவிடுகின்றனர்.

காலையிலேயே, அவர்களுக்கு ஆகவேண்டிய சில காகித கற்றைகளை கையில்
எடுத்துக்கொண்டு மற்ற துறை அமைச்சரை அவரது வீட்டிற்கு சென்று சந்திக்கிறார்களாம்.

‘அண்ணே..இந்த வேலையை முடிச்சு குடுத்துருங்க. நம்ம குடுமபத்துக்கு வேண்டிய ஆளு. ஏதோ நாம இருக்கும்போதே செய்தாத்தான் போச்சு’ என்று காகித கற்றைகளை கொடுகிறார்கள்.

பின்னர்,’ உங்களுக்கும் எத்தனையோ தேவைகள் இருக்கும். எனக்கு மட்டும்
தெரியாதா? என் துறையில் உங்களுக்கு ஆக வேண்டியது இருந்தால் உடனே செய்து முடித்து கொடுக்கிறேன்’ என்று அந்த அமைச்சரின்  காரியத்துக்கும் ரூட்டு போட்டுவிட்டு வருகிறார்களாம்.

இதில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வேண்டியவர்களின் இட மாறுதல், சில காண்ட்ராக்ட் வேலைகள் என்று துறை வேலைகள்  ஜரூராக நடக்கிறதாம். ஆனால், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடப்பதில்லை என்று அரசு அதிகாரிகள் குற்றம் சாற்றுகின்றனர்.

இந்த தகவலை முதல்வரிடமும் அதிகாரிகள் கொண்டு சென்றனராம். ஆனால், முதல்வரோ, ‘ஆட்சியே அந்தரத்தில் இருக்கிறது. இப்போ அமைச்சர்களை கண்டித்தால் அவர்கள்,ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்த்து நிற்பார்கள். முதலில் ஆட்சியை காப்பாற்றுவோம்’ என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம்.

முதல்வர் நிலையும் சங்கடமாகத்தான் இருக்கிறது என்று அதிகாரிகள் பரிதவித்து நிற்கின்றனர். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், அமைச்சர்கள் இப்படி காரியம் செய்து கொடுப்பது தெரிந்து அமைச்சர்கள் வீடு தேடி ஏகப்பட்ட புரோக்கர்கள் படை எடுக்கிறார்களாம்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here