துபாய் டார்ச் டவரில் திடீர் தீ விபத்து! பரபர விடியோ!

0
0
துபாய் டார்ச் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
துபாயின் மேரினோ மாவட்டத்தில்  சுமார் 335 மீட்டர்  உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு  உள்ளது.
இக்கட்டிடத்தில் 89மாடிகள் உள்ளன.
 https://twitter.com/arfojack/status/893218208559312897
இன்று அதிகாலை இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ 40வது மாடியில் இருந்து பரவியது தெரியவந்தது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
இவ்விபத்தில் யாருக்கும் காயமில்லை.
மின்கசிவால் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.
15மாடிகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு பணிகளை காவல்துறை தலைவர், தீயணைப்புத்துறை தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
https://twitter.com/khaleejtimes/status/893325587925913600
இக்கட்டிடத்தில் 2015ல் மிகப்பெரிய தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Mamad_ElShabazz/status/893221766432161792

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here