துபாய் அரசர் பங்கேற்ற ஹைடெக் திருமணம்!

துபாயில் நீதித்துறை பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.

அரசு சேவைகளை பெற உதவும் சர்வீஸ் 1 மையங்களில் நீதித்துறை சேர்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

துபாயில் திருமணம் செய்துகொள்வார் அதற்கான உறுதிமொழி, ஒப்புதல் பத்திரம் எழுத வேண்டும். நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

திருமண ஒப்பந்த பத்திரங்களுக்காக நீதிமன்றத்துக்கு சென்று காத்திருக்காமல் சர்வீஸ் 1 மையங்களிலேயே அந்த வேலையை முடித்துக்கொள்ளலாம்.

துபாய் அரசரின் அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஒமர்சுல்தான் மற்றும் அமல் அகமது குடும்பத்தினருக்கு இடையே திருமணம் நடைபெற செய்துகொள்ள முடிவானது.

இதற்கான ஒப்பந்தம் துபாய் எமிரேட்ஸ் டவரில் இயங்கிவரும் சர்வீஸ்1 அலுவலகத்தில் நடந்தது.

 

அங்குள்ள விடியோ கான்பரன்ஸ் வசதியில் நீதித்துறையினர் ஒப்பந்த படிவத்தின் ஷரத்துக்களை படித்து பெண், மாப்பிள்ளை வீட்டாரை  உறுதிமொழி ஏற்க வைத்தார்.

அவர்கள் கையொப்பம் இட்ட உறுதிமொழிப்பத்திரம் ஸ்கேன் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.

சிலநொடிகளில் அந்தப்பத்திரம் ஏற்கப்பட்டதாகவும் தகவல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துபாய் அரசர் ஷேக்முகமது பின் ரஷித் அல்மக்தும் திடீரென்று பங்கேற்றார்.  மேலும், உறுதிமொழிப்பத்திரத்தில் சாட்சி கையெழுத்தும் இட்டார்.

இந்நிகழ்ச்சி தொடர்பான விடியோவை நான் பங்கேற்ற வித்தியாசமான திருமணம் என்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் துபாய் அரசர்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION