முமைத்கானிடம் விசாரணை ! அதிகாரி கண்ணீர்!!

0
0

நடிகை முமைத்கானிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கண்ணீர் விட்டுள்ளார்.

ஆந்திர திரையுலக பிரபலங்களுக்கும் போதைக்கடத்தல் கும்பலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக திரையுலகை சேர்ந்த 12பேரிடம் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பினர்.

நடிகை சார்மியிடம் விசாரணை நடைபெற்றது.

நடிகை முமைத்கானிடம் வியாழக்கிழமையன்று 6மணிநேரம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது தனது இளம் வயது சம்பவங்களை முமைத்கான் விவரித்துள்ளார்.

முமைத்கானின் தாய் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், தந்தை தமிழகத்தை சேர்ந்தவர்.

சிறுவயதிலேயே இவர் குடும்ப பாரத்தை தோளில் சுமக்க துவங்கினார்.

நடனக்குழுவில் ரூ.1500க்கு சேர்ந்துள்ளார்.

பின்னர் படிப்படியாக உயர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு இறங்குமுகம் நிலவுகிறதாம்.

எனவே சினிமா தொடர்பான கலை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாராம்.

இளவயதில் முமைத்கான் தான்பட்ட சிரமங்களை கூற விசாரணை அதிகாரி ஒருவர் மிகவும் வருந்தி கண்ணீர் விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here