மாயமான பெண்ணை கண்டுபிடித்த டிரோன்! விடியோ!!

0
2

கலிபோர்னியா: சோள வயலில் சிக்கிய வயதான பெண் டிரோன் உதவியுடன் மீட்கப்பட்டார்.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ரண்டால்ப் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் மேரி ப்ரவுன்(62).
இவரை காணவில்லை என்று நகர போலீசில் குடும்பத்தினர் புகார் செய்தனர்.


போலீசார் அப்பகுதிக்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள சோளவயல்களில் டிரோன்கள் உதவியுடன் தேட போலீசார் முடிவெடுத்தனர்.
கேமரா பொருத்தப்பட்ட 2டிரோன்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார் 10நிமிடங்களி்ல் மேரி ப்ரவுன் சோளவயலில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

இரு மாதங்களுக்கு முன்னர் சிறுவனையும் இதேபோன்று டிரோன் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here