சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஒயின்!

0
2

அளவாக மது குடித்தால் டயாபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் தாக்கும் ஆபத்து குறையும் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டென்மார்க்கில் உள்ள ஆய்வு நிறுவனம் குடிப்பழக்கம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.
வாரத்திற்கு 3 முதல் 4 முறை மிதமாக மது அருந்துபவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகும் ஆபத்து குறைவாக உள்ளது என அறிவித்துள்ளது.

ஒயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிர்வகிக்க உதவுகிறது என்றும் உடலுக்கு குறிப்பிட்ட நன்மைகளையும் தருகிறது.
மது அருந்தும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம் ஆய்வு செய்யப்பட்டு இவ்விபரங்கள் தெரியவந்தன.


மதுவை மொத்தமாக ஒரே நேரத்தில் அருந்துவதை விட, அதை அளவாகவும் சீரான இடைவெளியில் அருந்துவது உடலுக்கு நன்மை தரும் என்று கண்டறிந்துள்ளார்கள்.


அளவோடு ஒயின் அருந்துவதால் பெண்களுக்கு 32% மும், ஆண்களுக்கு 27%மும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று, வாரத்திற்கு 1 முதல் 6 வரை ’பியர்’ குடித்தால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களுக்கு 21% குறைவாக உள்ளது,

அதே சமயம் ஆல்கஹால் சேர்ந்துள்ள மதுவை பெண்கள் அதிக அளவு குடித்தால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here