பிரபல ஓட்டல்களுக்கு நாய்க்கறி சப்ளை! இருவர் கைது!

0
0

கிருஷ்ணா: ஆந்திரமாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல ஓட்டல்களுக்கு நாய்க்கறி சப்ளை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரமாநிலத்தில் குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் அசைவ ஓட்டல்கள் பிரபலமானவை. அங்கு பல்வேறு வகை உயிரினங்களில் ஸ்பெஷல் அசைவ உணவுவகைகள் விற்கப்படுகின்றன.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜி கொண்டூரு கிராமத்தில் நாய்களை துன்புறுத்தி பிடித்த இரண்டுபேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் நாய்களை கொன்று அதன் மாமிசத்தை பிரபல ஓட்டல்களில் விற்பதாக தெரியவந்தது.

போலீசாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், அவர்கள் கட்டா ஆதிநாராயணா, சேது லட்சுமிராவ் என்று தெரியவந்தது.  அப்பகுதியில் அநாதைகளாக சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றை கொன்று அவற்றின் மாமிசத்தை அருகில் உள்ள நகரங்களில் உள்ள ஓட்டல்களில் அவர்கள் விற்று வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களில் இப்பகுதியில் இருப்பதாகவும், சுமார் 50நாய்களை கொன்று மாமிசம் விற்றதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இத்தகவல் கிடைத்ததும் குண்டூர் கிருஷ்ணா மாவட்டங்களில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here