ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் சண்டை! தாயின் வயிற்றில் இறந்தது குழந்தை! பகீர் விடியோ!!

0
2

பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்தபோது டாக்டர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மனதை உலுக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது ஜோத்பூர் உமைத் மருத்துவமனையில்.
கடந்த செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனை வந்தார்.


அவருக்கு உடனடியாக சிசேரியன் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆபரேஷன் தியேட்டருக்கு அப்பெண் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை துவங்கியது.
அப்போது டாக்டர்கள் நனிவால், பட் ஆகியோருக்கு இடையே மோதல் எழுந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருக்க பெண்ணுக்கு ஆபரேஷன் செய்ய தாமதம் ஆகியது.
இதனால் அப்பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்தது.


டாக்டர்கள் சண்டை தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை சூழ்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இப்பிரச்சனை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து உத்தரவிட்டுள்ளது.
அரசு உடனடியாக 2டாக்டர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. டாக்டர் தேசாய் தலைமையில் விசாரணைக்குழு அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here