பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய உண்மை ஹீரோ..!

கோரக்பூர் மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பல குழந்தைகளின் உயிரை கப்பாற்றிய டாக்டரின் செய்திகள் வெளி வந்துள்ளது.காபீல் கான் என்ற டாக்டர் பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

உத்தரபிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் இருந்த இக்கட்டான சூழ்நிலையின் போது, டாக்டர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

 

தடையில்லா ஆக்சிஜன் சப்ளை மட்டுமே பாதிக்கப்பட்ட குழந்தைகளை உயிர்காக்க முடியும் என்பதை புரிந்து கொண்ட டாக்டர் காபீல்  கான், அவருடைய காரில் அவரது நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை கடனாக
பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பியுள்ளார்.

எனினும், இதனால் குறைந்த நேரம் மட்டுமே பலன் அளிக்கும் என்ற நிலையில் அடுத்தக்கட்டமாக தனக்கு தெரிந்த  மருத்துவமனைகளுக்கு சென்று 12 ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

பின்னர், தன்னுடைய சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வருமாறு ஊழியர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.  இக்கட்டான சூழ்நிலையில் போராடி பல குழந்தைகளின் உயிரகளை காப்பாற்றி டாக்டர் காபீல் கான் அசத்தியுள்ளார்.

காபீல் கான் மட்டும் சரியான நேரத்தில் துரிதமாக பணியை செய்யவில்லை என்றால் 48 மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தைகளின்  எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியிருக்கும் என அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள். அன்று அவர் தான் உண்மையான ஹீரோ.

Related Topics : National News

About the author

Related

JOIN THE DISCUSSION