ஜெயலலிதா மரண தேதி! திவாகரன் புது விளக்கம்!!

0
1

மன்னார்குடி: ஜெயலலிதா மரணத்தேதி தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதனை மறுத்துள்ளார்.

மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்தார் என்று தெரிவித்திருந்தார்.  அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்றிரவு சுந்தரக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த திவாகரன், தான் பேசியதை மறுத்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.

இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்தனர்.

மருத்துவத்தில் கிளினிக்கல் டெத் ஆனவர்களை 24 மணி நேரத்துக்குமேல் பயாலஜிக்கல் டெத் ஆகாமல் பாதுகாக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.
அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன். அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டோம் என்று சொன்னாலே அது ரெட்டியிடம் கேட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

சிகிச்சையில் இருந்தவர் முதல்வர் என்பதால், அரசு விதிப்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து நரம்பியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் இறப்பை டிச.5-ம் தேதி உறுதிப்படுத்தினர். அதன் பின்னர்தான் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பை அறிவித்தது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

எனது நோக்கம், அப்போலோ நிர்வாகத்தின் மீதோ, பிரதாப் ரெட்டி மீதோ அல்லது வேறு யார் மீதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. இவ்வாறு திவாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஜெயலலிதா இறந்தது தொடர்பாக தவறான தேதி, நேரம் பரப்பப்படுகிறது.
ஜெயலலிதா டிச.5-ம் தேதிதான் இறந்தார். அவருடைய இறப்பு அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்றித்தான் அறிவிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here