ஆட்சி கலைப்பு தான் ஒரே தீர்வு..! ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-ஐ வீழ்த்துவதே அடுத்த மூவ்..!

கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று தினகரன் காத்திருந்து பார்த்தார். அனால் எந்த ரெஸ்பான்சும் இல்லை. இதில் கடுப்பான தினகரன், ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் தானே எடப்பாடி இந்த ஆட்டம் போடுகிறார். ஆட்சி இல்லையென்றால் தானாகவே ஓடி வருவார்கள் என்பது தினகரன் கணக்கு.

அதனால்,அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வைத்து ஆட்சியை கவிழ்க்கும் மூடுக்கு வந்துவிட்டார். அதற்கு சிறையில் இருக்கும் சசிகலாவும் பச்சை கொடி காட்டிவிட்டார் என்கிறார்கள். அதனால், தற்போது அடுத்தகட்டமாக ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஜனாதிபதி முன்னால் நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் பொது செயலர் இல்லாமலேயே எடப்பாடி அணியினர் கூட்டிய பொதுக்குழு செல்லாது.

அவர்கள் போட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் வலியுறுத்த உள்ளார்கள். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தலை சந்திக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கூறவுள்ளனர்.

அங்கும் நடவடிக்கை இல்லை என்றால், கோர்ட்டுக்கு செல்லவும் திட்டம் உள்ளதாக தெரிகிறது. இந்த ‘மூவ்’ மூலம் சசிகலா குடும்பத்திற்கு கட்சியின் அதிகாரம் கைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பது மன்னார்குடி சொந்தங்களின் ஒட்டு மொத்த
எதிர்பார்ப்பு.

 

ஆக,எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்தது தினகரனுக்கு பெரும் தலிவலியாக போய்விட்டது. முதலில் அவர்களை வீழ்த்த ஆட்சி அவர்கள் கையில் இருக்க கூடாது.

Related Topics : Tamilnadu News

 

About the author

Related

JOIN THE DISCUSSION