சபாநாயகரை சந்திக்க மாட்டோம்! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடம்!!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் தங்கதமிழ்ச்செல்வன்.
குடகில் அவர் கூறுகையில்,


சபாநாயகர் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாங்கள் அவரை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை.
நாங்கள் மேலும் 5நாள் அவகாசம் கோரியுள்ளோம்.
எங்கள் தரப்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கவுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அரசுக்கு ஆதரவாகத்தான் நாங்கள் வாக்களித்தோம்.
ஆனால், கொறடா ராஜேந்திரன் உள்ளிட்ட 10பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.


அவர்கள் மீது சபாநாயகர் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பேரவையில் கேள்வி எழுப்பினேன்.
அதுகுறித்து பரிசீலனை நடந்துவருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


எனவே, பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை குறித்து முதலில் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும்.
நாங்கள் கோரிய அவகாசம் தரப்படும் என்று விரும்புகிறோம்.

பொதுக்குழுவில் சசிகலா நியமனம் செல்லாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.
ஜனாதிபதியை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION