தொப்பி வாங்க போனார்…குக்கர் வாங்கி வந்தார்!

0
0

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னம் குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 145 மனுதாக்கல் செய்திருந்தனர்.


வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விஷால், தீபா உள்ளிட்ட 73மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  ஒரு பெண் உள்ளிட்ட 72பேர் போட்டியிடவுள்ளனர்.  அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

தொப்பி சின்னத்தில் கடந்த முறை போட்டியிடும்போது தினகரன் பெற்றிருந்தார். அச்சின்னமே தனக்கு இம்முறையும் ஒதுக்க வேண்டும் என்றார்.

 

 

இதுகுறித்து நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்திருந்த வழக்கு தள்ளுபடியானது. தொப்பி சின்னம் கேட்டு 6பேர் விண்ணப்பித்திருந்தனர்.
எனவே, குலுக்கல் முறையில் அச்சின்னம் வேட்பாளர் ரமேசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நமது கொங்கு மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்.

தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை எதிர்ப்பவர்களுக்கு பிரஷரை ஏற்படுத்தும் வகையில் இச்சின்னம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here