தினகரன் இலக்கு 2வது முறையும் தவறியது!

0
0

தமிழக அரசியல் தனது விருப்பத்துக்கேற்ப விதிகளை உருவாக்கி காய்களை நகர்த்த முயற்சிக்கிறார் டிடிவி தினகரன்.

அவரது இலக்கு இரண்டாவது முறையாக தவறியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்று பேரவையில் நுழைந்தால் முதல்வராக திட்டமிட்டார்.

தேர்தலில் பணம் வாரி இறைக்கப்பட்டது.   அதனை காரணமாக காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அவரது முதல் இலக்கு இவ்வாறு தவறியது.

தங்களது குடும்பத்துக்கு குறுக்கீடாக அரசியலில் இருந்துவரும் எடப்பாடியும், பன்னீர்செல்வத்தையும் இணையவைத்தார்.

தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சியாக பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து இருவரையும் அதிகாரத்தில் இருந்து இறக்கப்பார்க்கிறார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தன்பக்கம் இருக்க வேண்டும்.

இதனால் வருங்காலத்தில் தேர்தலை தனியே சந்திக்க நேர்ந்தால் பெரும்பான்மை வெற்றிபெறலாம் என்று இலட்சியம் கொண்டுள்ளார்.

சபாநாயகர் தனபால் முதல்வராகட்டும் என்று தினகரன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

ஆனால், சபாநாயகர் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எவ்வாறு ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற மனு அளிக்கலாம் என்று விளக்கம் கேட்டுள்ளார்.

கொறடா ராஜேந்திரன் புகார் அளித்ததை தொடர்ந்து சபாநாயகர் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினகரனின் இரண்டாவது இலக்கு சபாநாயகரின் நடவடிக்கையால் தவறியுள்ளது.

சபாநாயகர் தனபால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் சட்டச்சிக்கல்களை உள்ளடக்கியது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடினால் வழக்கு தொடர்ந்து நடக்கும்.  அதற்குள் நான்கு ஆண்டு ஆட்சி முடிந்துவிடும் என்கின்றனர் நீதித்துறையை சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here