சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்க புதிய ஆப் அறிமுகம்!

0
0

அபுதாபி: அமீரகத்தை சேர்ந்த கல்ப் பார்மா நிறுவனம் சர்க்கரை நோயாளிகளுக்கான புதிய மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
அபுதாபியில் சர்வதேச சர்க்கரை நோய் மாநாடு துவங்கியது. இம்மாநாடு டிசம்பர் 8ம்தேதி வரை நடைபெறும்.

இம்மாநாட்டில் அமீரக சர்க்கரைநோய் கழக தலைவர் டாக்டர் அப்துல்ரசாக்மதானி தலைமை வகித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலநாடுகளை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் டெக்ஸ்காம் ஜி5 என்ற சர்க்கரை நோய் கண்காணிப்பு ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை பயன்படுத்தி 24மணிநேரமும் உடலின் சர்க்கரை அளவை கண்காணிக்கலாம்.
மேலும், சர்க்கரை அளவை டாக்டர்களுக்கு இந்த ஆப் தானாகவே அனுப்பி சிகிச்சை குறிப்புகளையும் பெற்றுத்தருகிறது.


ஆப்பிள், ஆண்டிராய்டு ஆகிய இரு செயலிகளிலும் இந்த ஆப் பயன்படும். அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டுக்கழகம் இந்த ஆப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here