தமிழ்ப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி!

0
2

சென்னை:தமிழ் குறும்படம் ஒன்றில் நடித்துவருகிறார் கிரிக்கெட் வீரர் தோனி.
நான், எமன் படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குநர் ஜீவா சங்கர் அவரை வைத்துப் படம் இயக்கிவருகிறார்.
தமிழ்சினிமாவில் டோனி நடிக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன.


இந்நிலையில் விளையாட்டுக்கான ஆப் ரன் ஆதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்துவருகிறது.
அந்த ஆப்பில் இளைஞர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டுத்துறைக்கு அழைத்துவரும் குறும்படமாக ஒன்றை ஜீவாசங்கர் இயக்கி வருகிறார். டோனி கதாநாயகனாக அதில் நடித்துள்ளார்.

டோனி என்றாலே ஒரு உத்வேகம் இருக்கும். அதனை அவரை நடிக்கவைத்தபோது அருகில் இருந்து நன்கு உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார் ஜீவாசங்கர்.
கடந்த ஆண்டு தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியானது. எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாகி வசூலைக் குவித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here