எல்லையில் வீரமரணம்! தர்மபுரி வீரர் உடல் நல்லடக்கம்!!

0
1

தர்மபுரி: இந்திய எல்லையில், வீரமரணமடைந்த தர்மபுரி வீரர் சுரேஷ் உடல் 21குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் உள்ள ஆர்.எஸ்.புராவில் நடந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படையின் 78வது படைப்பிரிவில் பணியாற்றிய சுரேஷ் இறந்தார்.


இவர் தர்மபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர். 1995ல் படையில் சேர்ந்தார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் புன்னகை என்ற பெண் குழந்தையும், ஆதர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
வீரர் சுரேஷ் உடல் இன்று அதிகாலை 4மணிக்கு ஸ்ரீநகரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.


மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திரண்டுவந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க இறுதிமரியாதை செய்யப்பட்டது. பின்னர் பண்டாரசெட்டிப்பட்டி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


வீரர் சுரேஷ் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன், எஸ்பி கங்காதர் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆறுதல் கூறினர். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.20லட்சம் கருணைத்தொகைக்கான காசோலை சுரேஷ் மனைவி ஜானகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here