ம.பி.,யில் மரத்தடியில் பெண்ணுக்கு பிரசவம்..!

0
2

ஏற்கனவே, உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பா,ஜ., ஆளும் மாநிலமான மத்தியபிரதேசத்தில் மரத்தடியில் பெண்ணை பிரசவத்துக்கு அனுமதித்துள்ள சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.

அதுவும் தொடர்ந்து பா.ஜ., ஆளும் மாநிலங்களிலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது பலரின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பயோரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரசவத்துக்காக பெண் ஒருவர் சென்றுள்ளார்.


பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு தனி இடம் வார்டில் இல்லாததால் அங்குள்ள மரத்தடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மரத்தடியில் ஒரு இரும்பு கட்டிலைப் போட்டுள்ளனர். அதில் விரிப்புகள் கூட இல்லை. அதில் அந்த பெண்ணை படுக்க வைத்துள்ளனர். அந்த மரத்தின் கிளையில் ட்ரிப்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இடம் இல்லாததால் மரத்தடியில் இடம் ஒதுக்கி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here