ரஜினிகாந்த் மீது தீபா கடும் விமர்சனம்

0
0

சீமான், வீரலட்சுமியை தொடர்ந்து ரஜினியை விமர்சித்துள்ளார் தீபா.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருவாரா? வரமாட்டாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தடையில்லை,

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிகப் பெரும்பாண்மையான மக்களிடையே அதிருப்தி தான் நிலவுகிறது.
புனிதமான அரசியல் துறையை ஊறுகாய் போன்று அவர் பயன்படுத்த நினைப்பதை மக்கள் ரசிக்கவில்லை.

முதலில் அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும்.
கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், என்று கூறுவதற்கே அவரிடம் தெளிவு இல்லை.

திமுக, தமாக கூட்டணியைத் தான் ரஜினி கடந்த 1996ல் ஆதரித்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று எந்த அளவுகோல் அடிப்படையில் ரஜினிகாந்த் பேசினார்?
அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்களால் புறக்கணிப்பட்ட ஒரு செயல் இழந்த தலைவரை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் என்ன?
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று இவர் பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா?
தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here