தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை! ஷூவை நக்கி சுத்தம்செய்ய வைத்தனர்!!

0
3

அகமதாபாத்: டிவி மெக்கானிக்கை வற்புறுத்தி போலீசாரின் ஷூக்களை நக்கி சுத்தப்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ளது அமரைவாடி. இங்கு வசிக்கும் மக்களிடையே தகராறு எழுந்தது.
அதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அங்கு வசித்துவரும் ஹர்ஷத் யாதவ் என்பவரை விசாரணைக்காக கடந்த 28ம் தேதி இரவு அழைத்துச்சென்றனர். போலீஸ் நிலையத்தில் ஹர்ஷத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கலவரத்தில் ஈடுபட்டதாக அவரை சில போலீசார் தாக்கினார். நள்ளிரவு போலீஸ் நிலையத்துக்கு உயரதிகாரிகள் வந்தனர்.


அவர்களில் ஒருவர் ஹர்ஷத் எந்த ஜாதி என கேட்டுள்ளார். ஹர்ஷத் தலித் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, போலீசாரின் ஷூக்களை அவர் நாக்கால் சுத்தம் செய்யவைக்கப்பட்டார்.
மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் வீடு திரும்பினார்.

போலீஸ் நிலையத்தில் அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து விஷயம் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையத்தை ஹர்ஷத்தின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர்.  இதனைத்தொடர்ந்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here