திருமண வீட்டில் பணமழை! வைரல் விடியோ!!

0
0

பஞ்சாப்: திருமண வீட்டில் உண்மையாகவே பண மழை பெய்துள்ளது. ஆச்சர்யமான இச்சம்பவம் நடந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில்.

முல்தானை சேர்ந்தவர் முகமது அர்ஷத். இவருக்கு 7சகோதரர்கள். வீட்டில் கடைசிப்பையன் இவர்.

https://www.youtube.com/watch?time_continue=3&v=VzFi6P2X5fs

சகோதரர்கள் 8பேரும் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருகிறார். இதனால் அவர்கள் பணத்தட்டுப்பாடு ஏதுமின்றி வாழுகின்றனர்.

தங்கள் கடைசி சகோதரனின் திருமண விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர்.  இதனை தொடர்ந்து அரபுநாடுகளில் தாங்கள் சேர்த்த பணம், உள்ளூர் ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றை கட்டுக்கட்டாக 7பேரும் எடுத்துவந்தனர்.

மணமகனை மாப்பிள்ளை ஊர்வலமாக பஸ்சில் மணமகள் வீட்டுக்கு  அழைத்துச்சென்றனர்.  மணப்பெண் வசிக்கும் ஊருக்குள் பஸ் நுழைந்ததும், அவரை வரவேற்க வந்திருந்த திருமண வீட்டார் மீது கரன்சிகளை அள்ளிவிட்டனர்.

கரன்சி நோட்டுக்கள் மட்டுமின்றி செல்போன்களையும் பரிசாக அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான விடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here