ரூ.972க்கு தயிர்பாக்கெட் : ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்

0
3

ஒரு கப் தயிர் விலை ரூ. 972க்கு வாங்கினோமா என்று மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஜய்.
இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே உணவகத்தில் என்ன பொருட்கள் எவ்வளவு விலையில் வாங்கப்படுகின்றன என கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கிடைத்தது.

 

அதில் தயிர் கப் ஒன்றுக்கு ரூ.972 என்றும், சமையல் எண்ணெய் ஒருலிட்டர் ரூ.1241 என்றும்,
உப்பு கிலோ விலை ரூ.49க்கும் வாங்கியதாக தெரியவந்தது.
பருப்பு, சிக்கன் அதிகவிலைக்கு வாங்கியதாக தெரியவந்தது.

இதுகுறித்து செய்திகள் வெளியாகின.

அதனைத்தொடர்ந்து மத்திய ரயில்வே உயரதிகாரிகள் இன்று விளக்கம் அளித்தனர்.
தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் பதில் அளித்த அதிகாரிகள் தவறாக அளித்துள்ளனர்.
இதனால் பதிலில் பிழை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 3பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறினர்.

மேலும், உப்பு விலை ஒரு கிலோ ரூ.17.80காசுகளுக்கும், 108 தயிர்கப்புகள் கொண்ட தயிர் பாக்கெட் ரூ.972.87காசுகளுக்கும் வாங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.82.79காசுகளுக்கும், பருப்பு வகைகள் சந்தைவிலையை ஒட்டியே வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here