மைதானத்தில் கிரிக்கெட் வீரர் மரணம்! விடியோ!!

0
0

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாபா(20) மைதானத்தில் பந்துவீசமுயன்றபோது திடீரென இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது.


காசர்கோடு கிரிக்கெட் மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அதில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார் கேரளவீரர் பத்மநாபா.


அவர் முதல் ஓவரை வீசிமுடித்து இரண்டாவது ஓவரை வீச தயாரானார். பந்துடன் கிரீசுக்கு அவர் வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்படியே கீழே விழுந்துவிட்டார்.


மைதானத்தில் இருந்த டாக்டர் முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர்.
பத்மாநாபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here