பசுக்காவலர்கள் மீண்டும் அட்டூழியம்! முஸ்லிம் இளைஞர்கள் கொலை!!

0
0

பசுக்கடத்தலில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தில் 2 முஸ்லிம் இளைஞர்கள் அடித்து கொல்லப்பட்டனர்.

மேற்குவங்காள மாநிலத்தின் எல்லைப்பகுதியான பலகுட்டாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் மினிலாரியில் பசுக்களை ஏற்றிக்கொண்டு 2 முஸ்லிம் இளைஞர்கள் வந்தனர்.

சனிக்கிழமை நள்ளிரவில்  அவர்களது வாகனம் மறிக்கப்பட்டது.

ஒரு கும்பல் வாகனத்தில் ஏறி பசுக்களை கீழே இறக்கிவிட்டது.

பின்னர் வண்டியையும், அதில் வந்த இருவரையும் கடுமையாக தாக்கியது.

பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அதன்பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

கும்பல் வழிமறித்ததும் அங்கிருந்து தப்பிச்சென்ற மினிலாரி டிரைவர் போலீசில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் வருவதற்குள் இருவரும் இறந்திருந்தனர்.  விசாரணையில் அவர்களில் ஒருவர் அசாமை சேர்ந்த ஹபிசுல் ஷேக் என்றும், மற்றொருவர் மேற்குவங்காளத்தை சேர்ந்த அன்வர் ஹூசைன் என்றும் தெரியவந்தது.

மேற்குவங்காளத்தில்  இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக  பசுக்காவலர்கள் 3பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here