நம்பிக்கை கோரும் தீர்மானம்! ஆளுநருக்கு திடீர் நெருக்கடி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கோர உத்தரவிடுவது தொடர்பாக  ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் இந்த நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுக அரசை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து நடத்தி வருகிறார்.

அவருக்கு எதிராக 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.  முதல்வரை மாற்ற வேண்டுமென்று 19எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் தந்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் ஆளுநரை சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்த உள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் ஆளுநரை சந்தித்து எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.  உடனடியாக பேரவை கூட்டி எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆளுநர் இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் சாதித்து வருகிறார்.

இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி,  இவ்விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து பதில் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டபேரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 20ம் தேதி வரை நடத்தக்கூடாது என்று சபாநாயகருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION