திருமணத்துக்கு முன் ரத்ததானம்! உஜ்ஜைனி தம்பதி புதுமை!!

0
1

இந்தூர்: திருமணத்துக்கு முன் புதுமாப்பிள்ளையும், பெண்ணும் ஒன்றாக ரத்ததானம் செய்த சம்பவம் உஜ்ஜைனி நகரில் நடந்தது.
லலித்பூர் நகரை சேர்ந்தவர் காஞ்சன் ஜெயின். உஜ்ஜைனியை சேர்ந்த தபுபூமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் கடந்த புதன் கிழமை நடந்தது.


திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருடமும் புதுமாப்பிள்ளையும், பெண்ணும் சென்று ரத்ததானம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் மணமேடைக்கு அருகில் இருந்த அறைக்கு சென்று இருவரும் ஒரே நேரத்தில் ரத்ததானம் செய்தனர்.
இவர்களைத்தொடர்ந்து திருமணத்துக்குவந்திருந்த சுமார் 100பேர் ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னணியாக ஒரு ப்ளாஷ்பேக்.


தொழில்துறை இயக்குநராக பணியாற்றிவருபவர் காஞ்சன் ஜெயின். உஜ்ஜைனி நகரில் ரத்ததான முகாம் ஒன்றை இவரது துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.


அதில் பங்கேற்று ரத்ததானம் செய்யவந்த தபுபூமியை முதன்முறையாக சந்தித்தார். இருவருக்கும் காதல் பிறந்தது.
தங்கள் திருமணநாளில் ரத்ததான முகாம் நடத்தவேண்டும் என்று இருவரும் தீர்மானித்தனர். இருவரது வீட்டாரும் இதற்கு முழு சம்மதம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here