மத்தியப்பிரதேச அமைச்சர் டான்ஸ்! காங்கிரஸ் உடான்ஸ்!!

0
0

மத்திய பிரதேச அமைச்சர்  துணை நடிகையுடன் நடனமாடியதாக விடியோ வெளியிட்டிருந்தது காங்கிரஸ்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கில் விடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

விடியோவில் சிவப்பு சட்டை, மஞ்சள் கோட், கண்ணாடி அணிந்த ஒருவர் துணை நடிகையுடன் ஆடிக்கொண்டிருந்தார்.

கல்வி அமைச்சர் குன்வார் விஜய்ஷாவின் லட்சணத்தை பாருங்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தவிடியோ வெளியானதும் அதற்கு பலத்த மறுப்பு எழுந்தது.

இது 2015ம் ஆண்டில் வெளியான விடியோ. அப்போது பிகார் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்துவந்தது.

அதில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த அபய்குஷ்வா பிரச்சாரத்தில் பங்கேற்ற நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடியுள்ளார்.

இவ்வாறு கண்டன டுவிட்டர்கள் குவிந்தன. உடனே அந்த விடியோவை காங்கிரஸ் நீக்கியது. இருந்தபோதும் அதற்கு வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஆங்குர் சிங் என்பவர்,  காங்கிரஸ் டுவிட்டர் கணக்கில் இருந்து சர்ச்சை விடியோ நீக்கப்பட்டது. ஆனால், அதற்கான லிங்க் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச கல்வி அமைச்சர் குன்வாரும், பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அபய்குஷ்வாவும் தோற்றத்தில் ஒற்றுமையாக காணப்பட்டதால்   அவரை இவர் என்று விடியோ தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here