நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!

0
0

சென்னையில் காட்டுமான நிறுவனத்துக்கும், சந்தானத்துக்கும் ஏற்பட்ட பிரச்னையில், சந்தானம் வழக்கறிஞர் ஒருவரை தாக்கிய வழக்கில் நீதிமன்றம் சந்தானத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சந்தானம் மற்றும் சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

அந்தப் பிரச்னையில், சந்தானம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோருக்கிடையே நடந்த கைகலப்பில் சந்தானம், பா.ஜ., தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்தை தாக்கியதாக தெரிகிறது.

அதையடுத்து, பிரேம் ஆனந்த், விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதே போல சந்தானமும் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுதொடர்பாக, சந்தானம் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதனால், முன் ஜாமீன் கேட்டு சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இரண்டு வாரம் ஆஜராகி  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்தானத்துக்கு ஜாமீன் வழங்கினார்.

Related Topics : Cinema News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here