பிரதமர் மோடி மீது போலீசில் புகார்..!

0
0

இந்திய பிரதமர் மோடி மீது மும்பை அந்தேரி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே என்பவர் பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே அளித்துள்ள புகாரில்,

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரதம் என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே நாட்டைக் குறிப்பிடும் இடத்தில்  பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அவ்வாறு அவர்  பேசியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

ஹிந்துஸ்தான் என்ற பெயர் ஒரு மதத்தைக் குறிப்பிடுவது. சுதந்திர தின உரையில் ஹிந்துஸ்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது  சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு-1 கூறியுள்ள விதிமுறைகளை மீறும் செயல் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர் காலே அந்த புகார் மனுவை மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கும் அனுப்பியுள்ளார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here