சங்குசக்கரம் சினிமாவுக்கு தடை வருமா?

0
2

சென்னை: இம்மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ள குழந்தைகள் திரைப்படம் சங்குசக்கரத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சங்கு சக்கரம் படத்தில் நடித்த குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால் படத்தை தடைசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சங்குசக்கரம் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவை பார்த்தேன். அதில் பேசிய அப்படத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரம் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனக்கு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேசும்போது, அந்த பேயாக நடித்த அந்த குழந்தை நட்சத்திரத்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

படத்தில், நடித்துள்ள குழந்தைகள் கண்டிப்பாகத் துன்பப்பட்டிருப்பார்கள் என்பது சந்தேகம் இல்லாமல் நிரூபணமாகிறது. இந்தப் படத்தில் குழந்தைகள் உண்மையில் துன்புறுத்தப்பட்டிருந்தால், படக் குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொண்டு படத்தினை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும். என்று தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வருவது அரிது. தற்போது வெளிவர தயாராக உள்ள படத்திலும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here