காமன்வெல்த் மல்யுத்த போட்டி! தேடிவந்த தங்கப் பதக்கங்கள்!

0
0

தென்னாப்ரிக்கா:காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஒலிம்பிக் பதக்க நாயகன் சுஷில்குமார் தங்கம் வென்றார். பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் சாக்‌ஷிமாலிக்கும் தங்கப்பதக்கம் பெற்றார்.
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


74 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சுஷில்குமார் மற்றும் நியூசிலாந்து வீரர் ஆகாஷ் குல்லர் ஆகியோர் மோதினர்.
இதில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற சுஷில்குமார், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 8-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். காமன்வெல்த் போட்டியில் சுஷில்குமார் தங்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும்.


3 வருடங்களுக்கு பிறகு காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது பெருமையாக உள்ளது. இந்த வெற்றியை நான் எனது குரு மற்றும் எனது நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். ஜெய் ஹிந்த்! என்று தெரிவித்துள்ளார் சுஷில்குமார்.
இதேபோன்று 68கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் வெற்றிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here