தலைமை நீதிபதி மிஸ்ராவுடன் அதிருப்தி நீதிபதிகள் சந்திப்பு!

0
2

டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அதிருப்தி நீதிபதிகள் 4பேரும் மீண்டும் சந்தித்தனர்.
இன்று காலை உச்சநீதிமன்றத்தில் சுமார் 10நிமிடங்கள் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று பணிகள் தொடங்கின. அனைத்து நீதிபதிகளும் வருகை தந்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகள் விசாரணைக்காக தயாராகிவந்தார்.
அப்போது அவரை அதிருப்தி நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், குரியன் ஜோசன் ஆகியோர் சந்தித்தனர்.

சுமார்10 நிமிடங்களே இச்சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பு நீதிபதிகளுக்குள் இடையே எழுந்த கசப்புணர்வை கரைக்க செய்யும் என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதும், அதிருப்தி நீதிபதிகளின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க முடியாத நிலையில் தலைமை உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிருப்தி நீதிபதிகள் எண்ணிக்கை 6ஆகவும், தலைமை நீதிபதிக்கு ஆதரவாக 5நீதிபதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here