உலகிலேயே விலை உயர்ந்த காபி..! எதிலிருந்து தயாராகிறது தெரியுமா..?

0
2

ஆசியாவின் காபி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும். தற்போது,உலகிலேயே விலை உயர்ந்த காபி ஒன்றை தயாரிக்கிறது.

கர்நாடக மாநிலம் கூர்க் காபி உற்பத்திக்கு பேர் போன இடம். அங்கு உலகிலேயே விலை உயந்த காபி தயாரிப்பை மிக சிறிய அளவில் (small scale)தொடங்கியுள்ளது.

அதன் தயாரிப்பு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆமாம். நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்.

இந்த காபி புனுகு பூனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நன்கு பழுத்த காபி கொட்டைகளை புனுகு பூனைக்கு சாப்பிடக் கொடுக்கப்படுகிறது. அந்த பழங்களை பூனை சாப்பிட்டு ஜீரணமாகி அது போடும்,மலம் சேகரிக்கப்படுகிறது.

அந்த மலத்தை பக்குவப்படுத்தி, பதனிடுவது ஆகப் பெரிய வேலை மற்றும் செலவாகும் செய்முறை என்கிறார்கள்.

பக்குவப்படுத்தப்பட்ட புனுகு பூனையின் மலத்தை காப்பியாக்குகிறார்கள். புனுகுப்பூனையின் காபி லுவார்க் காபி என்றும் அழைக்கப்படுகிறது. இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். இந்த காபியில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.

புனுகு பூனையின் மலத்தை பக்குவப்படுத்தும் முறையில் அதிக சத்துக்கள் உள்ளடங்கியிருக்கின்றன. உலகம் முழுவதும் இருந்து இந்த காப்பீக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்கள் இதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கிலோ காப்பியின் விலை ஜஸ்ட் ரூ .20 ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை மட்டுமே. அசந்து போய்ட்டீங்களா?


இந்த காபி தயாரிப்பு தொடங்கியபோது 20 கி.கி., மட்டுமே தயாரித்தார்கள். 2015-16ம் ஆண்டுகளில் 60கி.கி.,மட்டுமே தயாரானது. கடந்த ஆண்டில் 200கி.கி., தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காபி உள்ளூரிலும் Ainmane என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாகவே புனுகு பூனையின் மலம் மனம்
வீசக்கூடியது. புனுகு பூனையின் வயிற்றில் சுரக்கும் இயற்கை சுரப்பிகள் இயற்கையான நறுமணத்தை தருவதுடன், நல்ல சுவையையும்
தருகிறது. அதனால் இந்த காபி தற்போது சக்கை போடு போடுகிறதாம்.

இப்ப தெரியுதா ஏன் அந்த காபி அவ்ளோ விலைன்னு..!? நம்மூர்ல நமக்காக ஒரு கிலோ Ainmane காபி ரூ.8ஆயிரத்துக்கு தர்றாங்களாம்.

Related Topics: National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here