செல்போனில் கேட்டு பெண்ணுக்கு சிசேரியன் ! தோல்வியில் முடிந்தது ஆபரேஷன்!

0
0

செல்போனில் டாக்டரிடம் அட்வைஸ் கேட்டவாறே நடந்த சிசேரியன் ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது.

இச்சோக சம்பவம் நடந்துள்ளது ஒடிசா மாநிலத்தில் கேந்திரப்படா மாவட்டத்தில்.

கேந்திரப்படா நகரில் வசித்துவருபவர் ஆர்த்தி. இவரது கணவர் கல்பதரு சமால்.

ஆர்த்தி தலைப்பிரசவத்துக்காக நகரில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பிரசவ வலி வந்தாலும் குழந்தை பிறக்க தாமதமானது.

இதனால் நர்ஸ்கள் செல்போனில் தொடர்புகொண்டு டாக்டர் ராஷ்மிகாந்திடம் விபரம் தெரிவித்தனர்.

டாக்டர் அறிவுரையின் படி நர்ஸ்கள் ஆர்த்திக்கு 3இடியட் சினிமாவில் நடந்தபடி சிசேரியன் அறுவை சிகிச்சை  செய்துள்ளனர்.

ஆனால் ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது.  பிறந்த குழந்தை இறந்தது.

இதனால் ஆர்த்தியும், அவரது கணவரும் பெரிதும் கவலையடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக கல்பதரு கமால் போலீசில் புகார் செய்துள்ளார்.

மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here