சீனா மீண்டும் முரண்டு..? பிரம்மபுத்ரா நதி நீர் தகவல்கள் பகிர முடியாது..!

பிரம்மபுத்ரா நதியில் உள்ள நீரின் அளவு மற்றும் அதன் பயன்பாடு போன்ற தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முடியாது என்று சீனா அதிரடித்துள்ளது.


சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது,


‘பிரம்மபுத்ரா நதி நீர் குறித்த முழுமையான தகவல்களை பெறுவதற்காக திபெத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தகவல் சேகரிப்பு மையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பின்னரே பிரம்மபுத்ரா நதி நீர் குரித்த தகவல்களும் முழுமையாக கிடைக்கும்.

அதனால், தற்போது பிரம்மபுத்ரா நதி நீர் தொடர்பான எந்த தகவல்களையும் சீனாவால் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனாலும், கைலாஷ், மானசரோவர் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை வருவோருக்காக சிக்கிமில் உள்ள நாதுலா கணவாயை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த சீன அரசு தயாராக உள்ளது.

அதே போல நதிநீர் தகவல்கள் தொடர்பாக இந்திய அரசுடன் நீண்ட காலமாக சீனா இணக்கமாகவும், ஒத்துழைப்புடனும் செயல்பட்டு
வருவதை இந்திய அரசும் அறியும்.

ஆகவே, பிரம்மபுத்ரா நதிநீர் தகவல்களை தற்போதைக்கு இந்தியாவுக்கு அளிக்க முடியாது. நாதுலா கணவாய் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பான தேதி ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.’ என்றார்.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION