30 குழந்தைகள் இறப்புக்கு நீதி விசாரணை..! உ.பி. அரசு உத்தரவு..!

கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடு தான் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்று வெளியான தகவலுக்கு உத்தரப்பிரதேச மாநில கல்வி அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் கடந்த இரண்டு  நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தச்  சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த  மருத்துவமனையை ஆய்வு செய்தார். குழந்தைகள் இறந்ததற்கான காரணம் நீதி விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.

Related Topics : National News

About the author

Related

JOIN THE DISCUSSION