குழந்தைகள் நூலுக்கு வரி: ஜவாஹிருல்லா எதிர்ப்பு

0
2

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட 12% ஜிஎஸ்டி வரிக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கை:
3 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பயன்படுத்தும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கூட்டெழுத்து பயிற்சி புத்தகங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும்.
இந்த வரிவிதிப்பால் குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் கையெழுத்துத்திறன் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ஆபாச  புத்தகங்கள் உட்பட இதர புத்தகங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் புத்தகங்களுக்கு 12 சதவீத வரி என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

மத்திய பாஜக அரசின் இச்செயல் குழந்தைகளின் மீது மோடி அரசிற்கு உள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.

எனவே, சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக திரும்பப் பெறவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here