முதல்வர் கார் திருட்டு! தலைமை செயலகத்தில் பரபரப்பு!!

தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் கார் திருட்டு போயுள்ளது.
இச்சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் பயன்படுத்தும் வேகன் ஆர் காரை தலைமை செயலகத்தில் இருந்து யாரோ திருடுவிட்டனர் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 3:30 மணி அளவில் எங்களுக்கு புகார் வந்தது, இது தொடர்பாக விசாரிக்கிறோம் என போலீசார் கூறினர்.
முதல்வரின் கார் திருட்டு குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போதுதான் விசாரணை தொடங்கி உள்ளது, விசாரணை முடிந்ததுமோ முழு தகவலும் தெரியவரும் என போலீஸ் டிஜிபி தெரிவித்தார்.
விஐபி கலாச்சாரத்தை தவிர்க்கும் வகையில் தனது சொந்த காரையே முதல்வர் கேஜரிவால் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கேஜரிவால் கட்சி துவக்கியதும் தொண்டர் ஒருவர் அன்பளிப்பாக இந்தக்காரை வழங்கினார்.
இந்த கார் ராசியாக உள்ளதென கருதி அதனையே தொடர்ந்து பயன்படுத்துகிறார் முதல்வர் கேஜரிவால்.

About the author

Related

JOIN THE DISCUSSION