யோகாவில் கின்னஸ் சாதனை! சென்னையை சேர்ந்த தாய் அபாரம்!!

0
0

சென்னை: சென்னையில் தாய் ஒருவர் யோகா பயிற்சியை 170மணிநேரம் தொடர்ந்துசெய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் கவிதா பரணிதரன் (31). மூன்றரை வயது குழந்தைக்கு தாயான இவர் தற்போது யோகா செய்வதில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

டிசம்பர் 23-ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் யோகா பயணம், டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணி வரை நீண்டது.
இதுகுறித்து சாதனையை மேற்கொண்ட கவிதா பேசும்போது, ”கடந்த 17 வருடங்களாக யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி மூலம் சுகப்பிரசவம் ஆவது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.


நாசிக்கைச் சேர்ந்த பெண்ணொருவர் 103 மணி நேரம் தொடர்ந்து யோகா செய்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க 180 மணி நேரம் இலக்கு நிர்ணயித்தோம்.

போட்டியில் ஒரு மணி நேரத்துக்கு 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கவில்லையெனில் 6 மணி நேரத்துக்கு அரை மணிநேரம் எடுக்கலாம். அந்த நேரங்களில் ஓய்வெடுத்தேன். உணவு உண்டேன்.

அதைத் தொடர்ந்து 175 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்தேன். ஒரு சில நொடிகள் ஏதேனும் தவறு ஏற்பட்டால், கின்னஸ் அதிகாரிகள் தரப்பில் ஒரு மணி நேரம் குறைக்கப்படும். அந்த வகையில் 170 மணி நேரத்துக்கான சான்றிதழை வழங்கினார்கள் என்றார்.


என் கணவர் பரணிதரன், தாய்தந்தை ஆகியோரது ஊக்குவிப்பும், அரவணைப்பும் இச்சாதனையை நிகழ்த்த பெரிதும் உதவியாக இருந்தனர்.
இவ்வாறு கவிதா தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here