சாலையில் பள்ளம்: அமைச்சர் ஷாக்!

0
0

சாலையில் ஏற்பட்ட பள்ளம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பஸ், கார் சிக்கின.
இன்று மதியம் இவ்விபத்து நடந்துள்ளது.


பிராட்வேயில் இருந்து வடபழனிக்கு கட்சர்வீஸ் செல்லும் 25பி மாநகர பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதேசாலையில் வந்த ஒருகாரும் பள்ளத்தில் சிக்கியது.
இவ்விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மெட்ரோ பணிகளால் இவ்வாறு திடீர்பள்ளங்கள் உருவாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற பள்ளம் ஏற்பட்டு மூடப்பட்டது.

இவ்விபத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,
சுரங்கம் தோண்டும்போது இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவது சகஜம்.
ஆனால், இவ்விபத்தில் உயிர்ச்சேதம் இல்லாததுதான் அதிர்ஷ்டம்.
பாதிக்கப்பட்ட சாலை நாளைக்குள் முழுமையாக பராமரிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here