தட்டிக்கேட்டவருக்கு பளார்! போலீஸ் லைசன்ஸ் பறிமுதல்! விடியோ!!

0
0

சண்டீகர் போலீஸ் ஏட்டு ஒருவரின் லைசன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் இடமாற்றமும் செய்யப்பட்டார்.

அவர் செய்த தவறுதான் என்ன?

சண்டீகரில் ஏட்டாக பணியாற்றிவருபவர் சுரேந்தர் சிங். கடந்த வெள்ளியன்று ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போன் ஒலித்தது.

 

அதில் பேசியபடியே வண்டியை ஓட்டினார். அவர் அருகே மற்றொரு நபர் டூவீலரில் வந்தார்.

வண்டியை நிறுத்தி என்ன விபரம் என்று அவரிடம் கேட்டார் சுரேந்தர் சிங்.

நாங்க செல்போன் பேசிகிட்டு, ஹெல்மெட் போடாமா வண்டி ஓட்டினா பைன் போடுறீங்க. இப்போ உங்களுக்கு அபராதம் போடுறது யாரு என்று கேட்டார் அந்நபர்.

இதனால் கடுப்பான சுரேந்தர் சிங், அந்நபரை பளார் பளார் என்று அறைந்தார்.

அடிவாங்கிய சுமித்குமார் இதனை படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டார்.

சண்டீகர் முழுவதும் இதற்கு எதிர்ப்பு  கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் மணிஸ்திவாரி காவல்துறை தலைவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு சுரேந்தர்சிங் லைசன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவரை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய காவல்துறை முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here