சாம்பியன்ஸ் கோப்பை: நழுவ விட்டது இந்தியா

0
0

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா-பாக் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இப்போட்டியை காண லண்டன் ஓவல் மைதானத்தில் திரண்டனர்.
பரபரப்பான இப்போட்டியில் டிவி விளம்பர கட்டணம் பத்து நொடிகளுக்கு ரூ.1கோடி வரை எகிறியது.
பாக். அணியின் முகமது ஆமிர் வீசிய 3வது பந்தில் ரோஹித் அவுட்டானார்.
அதனைத்தொடர்ந்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின.
கோலி(5), ஷிகர்தவன்(21) என்று அவுட்டாக 9ஓவர்களில் 33ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நம்பிக்கை நாயகர்களான யுவராஜ் 22ரன்கள், தோனி 4ரன்களில் அவுட்டாகினர்.
இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாண்டியா, ஜடேஜா ஜோடியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது.
32 பந்துகளில் 3 பவுண்டரி, 4சிக்ஸ்ர் என அரைசதம் கடந்தார் பாண்டியா.
துரதிருஷ்டவசமாக அவர் ரன்.அவுட்டானார்.
அதிர்ஷ்டக்காற்று பாகிஸ்தான் வசம் வீச ஆரம்பித்தது.

ஹசன் அலி வீசிய 30-வது ஓவரின் மூன்றாவது பந்தில் பும்ரா 1 ரன்னுக்கு
ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here