விஜய்மல்லையா கைது: சிபிஐ அதிகாரிகள் லண்டன் பயணம்

0
0

தொழிலதிபர் விஜய்மல்லையாவை கைதுசெய்து அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.

இந்தியாவில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 9வங்கிகளில் ரூ.9ஆயிரத்து400கோடி கடன் வாங்கியுள்ளார் விஜய்மல்லையா.

கடனை திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கியுள்ளார்.

அவரை கைதுசெய்து இந்தியாவுக்கு அனுப்புமாறு இண்டர்போல் போலீசாருக்கு இந்திய் அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதுமுறையான வேண்டுகோள் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

லண்டனில், கடந்த 18ம் தேதி விஜய்மல்லையா கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் மே 17ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், சிபிஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, மற்றும் ஒரு உயரதிகாரி, அமலாக்கப்பிரிவை சேர்ந்த 2 உயரதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.

அங்குள்ள நீதிமன்றத்தில் விஜய்மல்லையா தேடப்பட்டுவரும் குற்றவாளி என விபரங்களை தாக்கல் செய்து அவரை இந்தியா அழைத்துவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here