மாடு விற்பனைக்கு தடை: பாஜக உள்ளிட்ட5 முதல்வர்கள் எதிர்ப்பு; தமிழக முதல்வர் மவுனம்

0
0

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவுக்கு பாஜக முதல்வர் உள்ளிட்ட 6மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார். 

அருணாச்சல பிரதேச பாஜக முதல்வர் பீமா காண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையோர் அசைவம் உண்பவர்கள்.

மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்துபேசி இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிடுவது அவரது தனிப்பட்ட விஷயம்.

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர், கர்நாடக முதல்வர், கேரள முதல்வர் ஆகியோர் இந்த உத்தரவு குறித்து வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.

மக்களின் உணவு உரிமையில் தலையிட அரசுக்கு உரிமையில்லை.

இதுபோன்ற மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்க தேவையில்லை.

என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த உத்தரவு குறித்து மவுனம் காத்துவருகிறார்.

எதிரணியின் ஓ.பன்னீர்செல்வம், இந்த உத்தரவை எதிர்த்துள்ளார். இதனை பரிசீலித்து வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here