பாஜகவை எதிர்க்க தொடங்கும் அதிமுக?

0
0

மத்திய அரசின் பிடியில் தமிழக அரசு உள்ளது.

தமிழகத்தை பாஜக மறைமுகமாக ஆட்சிசெய்கிறது.

என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார் அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை.

கால்நடை விற்பனை தடை சட்டம் தொடர்பாக பாஜக அரசை அவர் விமர்சித்துள்ளார்.

சென்னை நீதிமன்றத்தில் அவரளித்த பேட்டியில், 

மக்களின் நலனுக்கான மத்திய அரசு சட்டங்களை மட்டுமே மதிப்போம்.

கால்நடை விற்பனை தடை சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்றார்.

பல அமைச்சர்கள் இதுதொடர்பாக முதல்வருடன் பேசியபின் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here