வளர்ப்புநாய்க்கு நடந்த இறுதி ஊர்வலம்! விடியோ!!

சிங்கப்பூரை சேர்ந்த பெண் தனது வளர்ப்புநாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்தி அதனை நல்லடக்கம் செய்துள்ளார்.


சிங்கப்பூர் செம்பவாங் பகுதியில் வசித்துவருபவர் ஹனுஸ்ரீ.
இவரும், இவர் தாயாரும் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.


பைரவா என்ற அப்பெண்நாய் சிங்கப்பூரில் அதிகநாள் வாழ்ந்த நாய் என்று பாராட்டு பெற்றுள்ளது.
ஹனுஸ்ரீயும், அவரது தாய் ரிட்டாவும் தங்கள் குடும்பத்தில் ஒன்றாகவே பைரவாவை வளர்த்துவந்தனர்.
சில நாட்கள் பைரவாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.


ரிட்டா தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அதனுடனேயே நேரத்தை செலவழித்துவந்தார்.
ஆனாலும் நேற்றுகாலை அந்நாய் இறந்தது.
அதன் இறுதிச்சடங்குகள் தங்கள் வீட்டில் நடைபெற் உள்ளதாக ஹனுஸ்ரீ முகநூலில் தெரிவித்திருந்தார்.

โพสต์โดย Hanu Shree Kutti Phycho บน 11 กันยายน 2017

உறவினர்கள், நண்பர்கள் பலர் வீட்டுக்கு வந்து பைரவாவுக்கு இறுதிமரியாதை செலுத்தினர்.
பின்னர் சவப்பெட்டியில் பைரவா வைக்கப்பட்டு மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இறுதிச்சடங்குகள் நடந்து அடக்கம் செய்யப்பட்டது.

About the author

Related

JOIN THE DISCUSSION