அனுமதியின்றி எருமைகள் கொலை: போலீஸ் பிடியில் இருந்தவர்கள் மீது கடும் தாக்குதல்

0
0

எருமை மாட்டை கொன்றதாக கைதான 5பேர் போலீசார் கண்முன்னரே கடுமையாக தாக்கப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்நகரில் உள்ள ஆச்சால்தல் சேரிப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் திடீரென்று ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.
இதுதொடர்பாக காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதிக்கு போலீசார் விரைந்துவந்தனர்.

எருமைமாடுகளை தோலுக்காக ஐந்துபேர் அறுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அவர்கள் அனுமதியின்றி இச்செயலில் ஈடுபட்டுவந்தனர்.
அவர்கள் கைது செய்து அழைத்துவரப்பட்டனர்.

இதற்கிடையே பசுக்காவலர்களுக்கு இச்செய்தி கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துவந்தனர்.
காவலர்கள் பிடியில் இருந்த ஐந்துபேரையும் அவர்கள் தாக்கினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here