தீபாவளிக்கு 5ஜி சேவை! பிஎஸ்என்எல் திட்டம்!!

தீபாவளி பண்டிகைக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்த மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கிவருகிறோம்.  ஊரகம், கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவையை கொண்டுசெல்வதில் முன்னணியில் உள்ளோம்.

இணையம் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். 5ஜிசேவையை நாடு முழுவதும் ஒரேநேரத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்கவதற்கான பணிகளை திட்டமிட்டுள்ளோம்.

மேலும் லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைந்த 5ஜி சோதனைக்கான சாதனங்களை உருவாக்கவதிலும், கோரியன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து நுட்பம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5ஜி சேவை என்பது உயர்தர ஹெச்டி இணைய சேவையாகும்.  இதன் ஆரம்ப வேகமே ஒரு ஜிபிபிஎஸ். 3முதல் 300ஜிஹா ஹெட்ஸ் அலைநீளத்தில் சேவை வழங்கப்படும்.

4ஜி சேவையில் அதிகபட்ச வேகம் ஒரு ஜிபிபிஎஸ் என்பதும், அதன் அலைநீளம் அதிகபட்சம் 8ஜிகாபைட்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

About the author

Related

JOIN THE DISCUSSION