தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல்., அதிரடி ஆஃபர்…!

நமது நாட்டின் பொது தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., குறைந்த கட்டணத்தில் நாளென்றுக்கு 1 ஜி.பி. மற்றும் அன்லிமிட் அழைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை வழங்க உள்ளது.

அதேபோல், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவையை பெறலாம் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

இந்த இரு திட்டங்களிலும் எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இந்த இலவச அழைப்பானது பி.எஸ்.என்.எல்., மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இலவச அழைப்பு, இலவச இணையம் என்று வழங்கியதை அடுத்து ஏற்பட்ட தொழில் போட்டியால், இதர நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்தது. இதன் தாக்கத்தை சமாளிக்கும் நோக்கோடு பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் இந்த சலுகைகளை அதிரடியாக அறிவித்துள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION